4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அறிமுகமாகிறது மேம்படுத்தப்பட்ட எட்டியோஸ் செடான் மற்றும் லிவா ஹேட்ச்பேக்!

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட எட்டியோஸ் மற்றும் லிவா மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. 

News image
Updated On :14 செப்டம்பர் 2016, 12:23 pm

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட எட்டியோஸ் மற்றும் லிவா மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. 

Story image

பிளாட்டினம் எட்டியோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள எட்டியோ செடானின் மேம்படுத்தப்ட்ட பதிப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு இஞ்சின்களுடனும் வெளியாகியிருக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சினின் விலை ரூ. 6.34 லட்சத்தில் தொடங்கி ரூ. 7.74 லட்சம் வரையிலும், 1.4 லிட்டர் டீசல் இஞ்சினின் விலை ரூ. 7.36 லட்சத்தில் தொடங்கி ரூ. 8.87 லட்சம் வரையிலும் விலையிடப்பட்டுள்ளது. 

ஹேட்ச்பேக்கான லிவாவும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு இஞ்சின்களின் மேம்படுத்தப்பட்டு வெளியாகியிருக்கிறது. இதன் 1.2  லிட்டர் பெட்ரோல் இஞ்சினின் விலை ரூ. 5.24 லட்சத்தில் தொடங்கி ரூ. 6.28 லட்சம் வரையிலும், 1.4 லிட்டர் டீசல் இஞ்சினின் விலை ரூ. 6.61 லட்சத்தில் தொடங்கி ரூ. 7.44 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் யாவும் மும்பையின் எக்ஸ்-ஷோரூம் விலை.

ப்ளாட்டினம் எட்டியோஸிலும், லிவா ஹேட்ச்பேக்கிலும், வி-வடிவ க்ரில், புதிய பம்பர்கள், ஃபாக் விளக்குகளில் க்ரோம் சுற்று, புதிய ஸ்பீடோமீட்டர் மற்றும் டிஜிட்டல் டெகோமீட்டர்,  ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதியுடன் கூடிய ஆடியோ சிஸ்டம்,  ஏபிஎஸ், டூயல் ஏர்பேக்ஸ், மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உதவும் ஐசோஃபிக்ஸ் பாயிண்ட்கள் ஆகிய வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.